Connect with us

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

vijayakanth vijay

News

விஜயகாந்திடம் நன்றி மறந்து நடந்துக்கொள்ளலாமா!.. சூர்யா பண்ணுனதை ஏன் பண்ணல.. விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Social Media Bar

Vijayakanth and Vijay :  தமிழ் சினிமா நடிகர்களில் கேப்டன் விஜயகாந்திற்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. கடந்த சில காலங்களாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் விஜயகாந்த். வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு விஜயகாந்தின் போட்டோ ஒன்று வெளியாகி பெரும் வைரலானது.

அதனை தொடர்ந்து தற்சமயம் விஜயகாந்தின் முகத்தையே அவரது மனைவி வெளியிடுவதில்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேப்டனின் உடல்நிலையில் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன.

இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் தொடர்பாக அதிக புரளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வர துவங்கின. இந்த நிலையில் அதை பொய் என நிரூபிக்கும் வகையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என கூறியிருந்தார்.

ஆனால் நடிகர் விஜய்க்கும் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் எவ்வளவோ நன்மைகளைச் செய்துள்ளார் விஜயகாந்த். அவர்கள் யாருமே ஏன் விஜயகாந்த் குறித்து பேசவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய் தனது சிறுவயதிலேயே நிறைய விஜயகாந்த் படங்களில் நடித்திருக்கிறார். அவரது தந்தைக்கும் படம் இயக்க விஜயகாந்த் நிறைய வாய்ப்புகள் கொடுத்துள்ளார். அதே போல விஜய்யின் முதல் படம் தோல்வியை கண்டப்போது செந்தூரப்பாண்டி என்ற படத்தில் தனக்கு தம்பியாக விஜய்யை நடிக்க வைத்தவர் விஜயகாந்த்.

இப்படி இருக்கும்போது விஜய்யும் விஜய்யின் தந்தையும் இப்படி நன்றி மறந்து இருக்கலாமா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது!.

To Top