News
அந்த மாதிரி கதாபாத்திரத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது..! விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!
தமிழில் தற்சமயம் பெரும் ஹிட் கொடுத்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என கூறலாம். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்குமே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால்தான் கோட் படம் வெளியானது முதலே தற்சமயம் அதிக வசூலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்த பல கதாபாத்திரங்கள் படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்தில் இருந்து விலகியிருப்பது தெரிகிறது.
விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா

உதாரணத்திற்கு படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது நடிகர் மாதவன் என கூறபடுகிறது. ஆனால் நடிகர் மாதவனுக்கு வேறு படங்களில் வேலை இருந்த காரணத்தால் அவர் அப்போது கோட் திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதே போல படத்தில் ஆரம்பத்தில் நடிகை நயன்தாராதான் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நயன் தாராவும் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தினால் நடிகை சினேகா இந்த படத்தில் நடித்தார்.
பிறகு இந்த படத்தை பார்த்த நயன் தாரா தன்னை விட சினேகாவிற்கு இந்த கதாபாத்திரம் நன்றாக செட் ஆகியுள்ளது என கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நயன்தாரா அவருடைய முன்னாள் காதலர் பிரபு தேவா நடித்த காரணத்தால்தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
