News
சந்தானம் பண்ணுன அந்த விஷயத்தை எஸ்.கே பண்ணல!.. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்காததுக்கு அதுதான் காரணம்..!
நடிகர் சந்தானமும் சரி சிவகார்த்திகேயனும் சரி இருவருமே விஜய் டிவியின் மூலமாகதான் சினிமாவிற்கு வந்தனர். இருவருமே விஜய் டிவியில் காமெடி செய்துக்கொண்டிருந்த நடிகர்கள்தான் என கூறலாம்.
இந்த நிலையில் திரைத்துறைக்கு வந்த பிறகு மட்டும் ஏன் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்களே நடிக்கவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்து வந்துள்ளது. லொள்ளு சபாவில் சந்தானம் நடித்து கொண்டிருந்தப்போதே அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளார் சிம்பு.

அதன் பிறகு சிம்புதான் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பொல்லாதவன் மாதிரியான படங்களில் தனுஷிடன் சேர்ந்து நடித்தார் சந்தானம். ஆனால் தனுஷிற்கும் சிம்புவுக்கும் இடையே போட்டி வந்த பிறகு தனுஷ் படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்தார்.
தனுஷ் பிரச்சனை:
இந்த நிலையில் நடிகர் தனுஷ்தான் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். வெற்றிமாறனை அழைத்து அப்போதே சிவகார்த்திகேயனுக்கு ஒரு படம் பண்ண சொன்னார். இந்த நிலையில் 3 திரைப்படத்தில் தனுஷ் நடித்தப்போது அதில் வரும் இரண்டு நண்பர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானத்தை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
ஆனால் சிம்புவுக்கும் தனுஷிற்கும் போட்டி இருப்பதால் அதில் நடிக்க மறுத்துள்ளார் சந்தானம். அதற்கு பிறகு எஸ்.கேவுக்க்கும் தனுஷிற்குமே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் தனுஷ் மூலமாக வந்த காரணத்தினால் மரியாதை நிமித்தமாக எஸ்.கே படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறாராம் சந்தானம்.
