Latest News
சூர்யா இயக்குனருடன் அடுத்து கூட்டணி போட்ட சிவகார்த்திகேயன்!.. வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு போன சூர்யா படம்..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு அயலான் திரைப்படம் வருவதற்கு மட்டுமே கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. அயலான் திரைப்படத்தின் வேலைகள் முடிந்த உடனேயே சிவகார்த்திகேயன் ராக்கேட் வேகத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். வேக வேகமாக நடித்து அந்த படத்தின் படப்பிடிப்பையே முடித்து கொடுத்துவிட்டார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவர் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
வரிசையாக படங்கள்:
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்புகளுமே படு வேகமாய் சென்றுக்கொண்டுள்ளன. இந்த படத்திற்கு பிறகு சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் எஸ்.கே என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
சூர்யா43 படத்தை ஒதுக்கி வைத்த சுதா கொங்காரா தற்சமயம் எஸ்.கே பட வேலையை துவங்கியிருக்கிறாராம். இதனை அடுத்து ஏ.ஆர் முருகதாஸின் திரைப்பட வேலைகள் முடிந்த உடனேயே இந்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.