Cinema History
ஸ்ரீ தேவிக்கு வந்த தேசிய விருதை தட்டி பறித்த கமல்.. அப்பவே அப்படி ஒரு சண்டையா?
பழம்பெரும் நடிகைகளில் இளைஞர்களின் கனவு கனியாக பல காலங்களாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிற்கு நடிக்க சென்று விட்டதால் அவருக்கு ஹிந்தியில் மார்க்கெட் அதிகரித்தது.
அதற்குப் பிறகு பெரிதாக அவர் தமிழில் திரைப்படங்களில் நடிக்கவில்லை ஆனால் தமிழில் நடித்த பொழுது ஸ்ரீதேவிக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் மூன்றாம் பிறை.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி அதில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் கண்டிப்பாக இந்த படத்திற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன.
ஆனால் அந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்குதான் தேசிய விருது கிடைத்தது. அது அப்பொழுது பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கூறப்பட்ட பொழுது கிளைமாக்ஸ் காட்சிகளில் கமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் தன்னுடைய காதலி கிடைக்க மாட்டாள் என்று தெரிந்த பிறகு அவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி சிறப்பானதாக இருந்தது.
மேலும் ரயில்வே ஸ்டேஷனில் கமல்ஹாசனுக்கு சில காட்சிகள் இருந்தன. அதுவும் சிறப்பாக இருந்ததாக அப்பொழுது பேசப்பட்டது. ஆனால் அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால் சிறந்த நடிகருக்கான விருதைதான் கமல்ஹாசன் பெற்றார்.
சிறந்த நடிகைக்கான விருதை பொருத்தவரை அப்பொழுது அர்த் என்ற ஒரு படத்தில் நடித்த நடிகை ஷபனா ஆஸ்மி ஸ்ரீதேவியை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனால்தான் ஸ்ரீதேவிக்கு அந்த விருது கிடைக்காமல் போனது. இருந்தாலும் கூட மாநில அளவில் வழங்கப்பட்ட சிறந்த நடிகைக்கான விருதை அந்த வருடத்தில் ஸ்ரீதேவி பெற்றார்.
