Connect with us

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தூக்கி வச்சி கொண்டாடுறீங்களே!.. இந்த  தமிழ் படம்லாம் கண்ணுக்கு தெரியலையா!.. ரசிகர்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!.

manjummel boys

News

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தூக்கி வச்சி கொண்டாடுறீங்களே!.. இந்த  தமிழ் படம்லாம் கண்ணுக்கு தெரியலையா!.. ரசிகர்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

Manjummel Boys : தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் வந்த ஒரு நண்பர்கள் குழு சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதையாக இருக்கிறது.

10 பேர் கொண்ட இந்த குழு குணா திரைப்படத்தில் வரும் குகையை சுற்றி பார்ப்பதற்காக செல்லும்பொழுது அதில் ஒரு நபர் மட்டும் 900 அடி ஆழமுள்ள ஒரு குழிக்குள் மாட்டிக் கொள்ள மீதம் இருக்கும் ஒன்பது பேர் சேர்ந்து அவரை காப்பாற்றுவது திரைப்படத்தின் கதையாக இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த படங்களுக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அப்படி என்ன மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இருக்கிறது என்பது தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க முதலாளிகளுக்குமே கூட தெரியாத விஷயமாக இருக்கிறது.

MANJUMMEL-boys
MANJUMMEL-boys

வரவேற்பை பெறாத படங்கள்

இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு சக்திவேல் கூறும் பொழுது, மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஆனால் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வந்த குட் நைட், பார்க்கிங், அயோத்தி மாதிரியான திரைப்படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல திரைப்படங்கள்தான்.

அதுவும் அயோத்தி திரைப்படமும் இந்த திரைப்படம் போலவே நிஜமாக நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால் பார்க்கிங், குட் நைட் திரைப்படங்கள் ஓடிய அளவு கூட அயோத்தி திரைப்படம் ஓடவில்லை. எனவே வேற்று மொழி படத்திற்கு கொடுக்கும் இந்த வரவேற்பை ஏன் இந்த மக்கள் தமிழ் திரைப்படத்திற்கு கொடுக்கவில்லை இந்த திரைப்படங்கள் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு படவில்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் சக்திவேல்.

To Top