நீ செஞ்ச பாவத்தையெல்லாம் இதை பண்ணி சரி பண்ணு!.. ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜெய்சங்கர் கொடுத்த அட்வைஸ்!..

Actor Jaishankar: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர். அதே போல அவர்களுக்கு பிறகு அடுத்த தலைமுறைகளாக நடிகர் சிவக்குமாரும், ஜெய் சங்கரும் வந்தனர்.

ஜெய் சங்கருக்கும் சிவகுமாருக்கும் அப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஜெய்சங்கரை பொறுத்தவரை அவர் அனைவருடனும் எளிதாக பழகக்கூடியவர். ஜெய்சங்கரை குறித்து பேசும் பலரும் அவரை குறித்து நல்லவிதமாகவே பேசியுள்ளனர்.

Social Media Bar

அப்போதெல்லாம் ஹாலிவுட் சினிமாவில் கௌபாய் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதே போல துப்பறியும் திரைப்படங்களும் அங்கு பிரபலமாக இருந்தது. அதிகமாக வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்கும் ஜெய்சங்கர் அதை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர நினைத்தார்.

உதவி செய்யும் ஜெய்சங்கர்:

எனவே அவர் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கௌபாய் திரைப்படங்களை அறிமுகப்படுத்திய பெருமை ஜெய்சங்கரையே சேரும். இந்த நிலையில் ஒய்.ஜி மகேந்திரன் அவரை குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் மனநிலையை கொண்டவர் நடிகர் ஜெய்சங்கர். எனவே எப்போதும் அது தொடர்பாக பல விஷயங்களை செய்துக்கொண்டிருப்பார். நான் அந்த சமயத்தில் இசை கச்சேரிகள் நிறைய செய்து வந்தேன். அப்போது என்னை அங்கிருக்கும் நிறைய அனாதை ஆசிரமங்களுக்கு அழைத்து சென்று பாடல் பாட வைத்துள்ளார்.

வா நீ செய்யும் பாவத்துக்கு எல்லாம் புண்ணியம் தேடு வாடா என்று என்னை அழைத்து செல்வார். அந்த அளவிற்கு அவர் செய்த உதவிகள் எல்லாம் எக்கச்சக்கமானவை என்கிறார் ஒய்.ஜி. மகேந்திரன்.