Connect with us

யூ ட்யூப்பர்களுக்கு ஆப்பு வைத்த புதிய விதிமுறை.. விளம்பரத்தை நீக்கும் யூ ட்யூப்..!

Tech News

யூ ட்யூப்பர்களுக்கு ஆப்பு வைத்த புதிய விதிமுறை.. விளம்பரத்தை நீக்கும் யூ ட்யூப்..!

Social Media Bar

Youtube மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலமாக மாதம் தோறும் லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்கிற காரணத்தினாலேயே இப்பொழுது வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு நிறைய இளைஞர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பணம் ஈட்டுவதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு விஷயமாக youtube இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் யூடியூப் நண்பர்கள் எல்லாம் மாதம் 15 லட்சம் குறைந்தபட்ச வருமானமாக சம்பாதிக்கின்றனர்.

இதனை அடுத்து நிறைய youtube சேனல்கள் இப்பொழுது உருவாக துவங்கியிருக்கின்றன. youtube சேனல்களைப் பொறுத்தவரை அதை உருவாக்குவதற்கு எந்த ஒரு பணமும் செலுத்த தேவையில்லை என்கிற காரணத்தினால் விருப்பப்பட்டவர்கள் எல்லாம் youtube சேனல்கள் வைத்துள்ளனர்.

இதனால் தரம் குறைவான வீடியோக்கள் நிறைய வர துவங்கியிருக்கின்றன. இதனை தொடர்ந்து தற்சமயம் புதிய விதிமுறையை அமல்படுத்திருக்கிறது அதன்படி ஏற்கனவே உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடுத்து ரீமிக்ஸ் செய்வது போன்ற வீடியோக்களுக்கு இனி விளம்பரங்களை கொடுப்பதில்லை என முடிவு செய்திருக்கிறது youtube.

முழுக்க முழுக்க தரமான வீடியோக்களை உருவாக்கி வெளியிடும் youtube தளங்களுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து பல யூ ட்யூப்பர்கள்  இதனால் வருத்தத்தில் இருக்கின்றன.

To Top