News
12 வருஷம் வி**வை அடக்கணுமா?. மாத்திரை விற்க செய்யும் வேலை.. மஹா விஷ்ணுவை வச்சி செய்த யு ட்யூப்பர்..!
கடந்த சில நாட்களாகவே மகாவிஷ்ணு என்கிற பெயர்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயராக இருக்கிறது. இதற்கு முன்பு இந்த மகாவிஷ்ணு யார் என்றுக்கூட பலருக்கும் தெரியாது.
ஆனால் சமீபத்தில் அரசு பள்ளி விழாவில் கலந்து கொண்ட இவர் பேசிய விஷயங்கள் இவரை பிரபலம் ஆகிவிட்டன. தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதாரமற்ற மூடநம்பிக்கை விஷயங்களை பேசும் நபராக இருந்து வரும் மகாவிஷ்ணு ஒரு திடீர் சாமியார் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து மக்கள் மத்தியில் மறுபிறவி மற்றும் துறவிகளின் சக்திகள் என்று ஏதேதோ பேசி வருகிறார் என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
மகா விஷ்ணு சர்ச்சை:
இந்த நிலையில் அவரை பெண்கள் அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அங்கு சென்ற மகாவிஷ்ணு பேசிய விஷயங்கள் அங்கு இருக்கும் ஆசிரியருக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினில் தொடங்கி பலரும் ஆசிரியருக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மிஸ்டர் ஜிகே எனும் youtube சேனல் கூறும் பொழுது மகாவிஷ்ணு கூறிய விஷயங்களை எல்லாம் வெறும் அபத்தங்களாகதான் இருக்கின்றன.
அறிவியலில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் தனக்கு தெரிந்தது போல பேசியிருக்கிறார். மேலும் விந்து அணுவை 12 ஆண்டுகள் கட்டுப்படுத்தி நெற்றிக்கு கொண்டு வந்தால் சக்தி கிடைக்கும் என்கிறார். விந்து அணு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையிலேயே உருவாகும் ஒரு விஷயம்தான்.
அவை தானாகவே வெளியேறியும் விடும். அதை கொண்டு போய் யாராவது நெற்றி பொட்டில் வைக்க முடியுமா என்று கூறியிருக்கிறார் மேலும் இதே போல மகாவிஷ்ணு கூறிய பல விஷயங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை விவரித்து அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அது இப்பொழுது ட்ரெண்டாக துவங்கியிருக்கிறது.
