News
மனைவிக்கு கொடுத்த டார்ச்சர்.. தலைமறைவான யூ ட்யூபர்..!
முன்பெல்லாம் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் இயக்குனர்கள் போன்றவர்கள்தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் யூ ட்யூப் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர்.
முக்கியமாக அதிகமான பாலோவர்களை கொண்டவர்கள் அதிக பிரபலமானவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் அப்படியான பிரபலங்களில் ஒருவர்தான் சுதர்சன். இவர் யூ ட்யூப்பில் மொபைல் தொடர்பான விமர்சனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
ஏற்கனவே டெக் பாஸ் என்கிற யூ ட்யூப் சேனலில் இவர் பணிப்புரிந்து வந்தார். அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனியாக யூ ட்யூப் சேனல் ஒன்றை இவர் துவங்கினார். இந்த நிலையில் தற்சமயம் அடுத்து ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது.
இவர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு இவர் கொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார்.
வீடு கட்ட பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் மேலும் வீட்டை விட்டு அடித்து விரட்டியதாகவும் இவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சுதர்சனின் தந்தை உட்பட 5 பேர் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்சமயம் சுதர்சன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
