News
6 வயது குழந்தைக்கு வயிறு முட்ட உணவு கொடுத்து கொ.லை.. கடன் பிரச்சனைக்காக பெண் செய்த கொடூரம்..
6 வயது குழந்தைக்கு வயிறு முட்ட உணவு கொடுத்து கொ.லை.. கடன் பிரச்சனைக்காக பெண் செய்த சம்பவம்..
நாளுக்கு நாள் ஊருக்குள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியாக சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புங்கனூரில் நடந்த சம்பவம் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு கொடுத்தே மூச்சடைக்க செய்து கொடூரமாக குழந்தையை கொலை செய்திருக்கிறார் ஒரு பெண்.
புங்கனூரை சேர்ந்த அசந்துல்லா சானியா தம்பதியினரின் ஆறு வயது மகள்தான் அஸ்ஃபியா. கடந்த 1 ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது.
குழந்தையை எங்கு தேடியும் காணவில்லை என்பதால் பெற்றோர்கள் போலீஸ்க்கு சென்றுள்ளனர். ஆனால் போலீஸ் தேடி கண்டுப்பிடித்தப்போது அருகில் உள்ள கால்வாயில் சிறுமி சடலமாகதான் கிடைத்தார்.
குழந்த இறப்பில் மர்மம்:
குழந்தையின் இறப்பு விபத்து போல தெரிந்தாலும் கூட போலீசாருக்கு இதில் சந்தேகம் ஏற்படவே அருகில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமாராக்களில் சோதனை செய்துள்ளனர். அதில் புர்கா அணிந்த மர்ம பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது தெரிந்துள்ளது.
மேலும் போலீசார் விசாரிக்கும்போதுதான் உண்மை வர துவங்கியது. ரேஷ்மா என்கிற பெண் அஸ்ஃபியாவின் பெற்றோரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை அவர் திருப்பி தராததால் அஸ்ஃபியாவின் பெற்றோர்கள் அவரை திட்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான ரேஷ்மா குழந்தையை கடத்தி அதற்கு மூச்சு முட்டும் அளவிற்கு உணவளித்து கொலை செய்திருக்கிறார். பிறகு அந்த குழந்தையை நீரில் வீசியிருக்கிறார். தற்சமயம் இந்த செய்தி பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
