டான்ஸ் ஆடுவதற்கே டூப் போட சொன்ன எம்.ஜி.ஆர்.. ட்ரிக்காக இயக்குனர் செய்த வேலை!.. எம்.ஜி.ஆருக்கே விபூதி அடிச்சிட்டிங்களே!..
தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பெரும் சாதனைகளை படைத்தவர் எம்.ஜி.ஆர். பணக்காரர்களை விடவும் பாமர மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு அதிக வரவேற்பு இருந்தது.
அதற்கு தகுந்தாற் போல எம்.ஜி.ஆரும் தொடர்ந்து தனது திரைப்படங்களில் பாமர மக்களை போன்ற கதாபாத்திரலேயே நடித்து வந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தப்போதும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதற்கு அதுதான் காரணமாக அமைந்தது.
திரைப்படங்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு பிடித்த மாதிரிதான் படத்தில் உள்ள பாடல்கள், திரைக்கதை அனைத்துமே இருக்க வேண்டும். அதில் ஏதாவது அவருக்கு பிடிக்கவில்லை எனில் அதை அப்படியே நீக்கிவிடுவார் எம்.ஜி.ஆர்.

இந்த நிலையில்தான் அன்பே வா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் எம்.ஜி.ஆர். ஏ.சி திருலோகசந்தர் என்னும் இயக்குனர்தான் இந்த படத்தை இயக்கினார். இவர்தான் நடிகர் சிவக்குமாரையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர்.
இந்த நிலையில் அன்பே வா படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது அதில் கல்லூரி மாணவர்களுடன் எம்.ஜி.ஆர் போட்டி போட்டு ஆடுவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. ஆனால் அந்த நடனம் கொஞ்சம் கடினமாக தெரிந்ததால் அதில் ஆடுவதற்கு மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

டூப் போட்டு பாடலை எடுத்துவிடுங்கள். க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும் நான் வந்து நடித்து தருகிறேன் என கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதனை அறிந்த இயக்குனர் ட்ரிக்காக ஒரு வேலையை செய்தார்.
எம்.ஜி.ஆரை அழைத்து க்ளோஸ் காட்சிகளை எடுக்கிறேன் என ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு தெரிந்துள்ளது, இயக்குனர் தன்னை வைத்தே முழு பாடலையும் எடுத்துவிட்டார் என்று..
அன்பே வா திரைப்படம் வெளியானப்போது அந்த பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.