SUN TV Serial: சீரியல்களைப் பொறுத்தவரை அதற்கு டி.ஆர்.பி ரேட்டிங் என்பது மிகவும் முக்கியமானதாகும். டி.ஆர்.பி ரேட்டிங் பொறுத்தே நாடகங்களுக்கான விளம்பரங்களுக்கு தொகை நிர்ணயம் செய்யப்படும்.
இந்த நிலையில் சன் டிவியில் குறைந்த டி.ஆர்.பி பெற்று வரும் மூன்று நாடகங்களை ஒரே சமயத்தில் நிறுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் இந்த நாடகங்களுக்கு ரசிகர்கள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதில் முதல் நாடகமாக அன்பே வா நாடகம் இடம்பெற்று இருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சன் டிவியில் அன்பே வா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் பூமிகா மற்றும் கதாநாயகன் இருவருக்கிடையே உள்ள காதலை மையமாக வைத்து சென்ற நாடகம் ஒரு அளவுக்கு மேல் எப்படி செல்வது என்று தெரியாமல் எங்கேயோ ட்ராக் மாறி சென்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது அடுத்து அந்த நாடகத்தை தற்சமயம் அதிக நபர்கள் பார்ப்பதில்லை என கூறப்படுகிறது.

மிஸ்டர் மனைவி: இந்த தொடர் சமீபத்தில்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகவே துவங்கியது இந்த நாடகத்தில் கதாநாயகனாக மோகன் ரவிச்சந்திரனும் கதாநாயகியாக ஷபானாவும் நடித்து வருகின்றனர் ஆனால் தொடங்கியது முதலே ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் குறித்து பெரிதாக ஆர்வம் ஏற்படாத காரணத்தினால் இந்த தொடரும் சீக்கிரமே முடிவடைய இருக்கிறது
செவ்வந்தி தொடர்: போன வருடம் துவங்கிய செவ்வந்தி தொடருக்கு இப்போது வரை பெரிதாக வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது எனவே இந்த மூன்று நாடகங்களையும் தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் முடித்து வைக்க திட்டமிட்டுள்ளதாம் சன் டிவி.






