Connect with us

கண்ணதாசன் பாட்ட தூக்கி குப்பைல போடுய்யா!.. இயக்குனர் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

kannadasan mgr

Cinema History

கண்ணதாசன் பாட்ட தூக்கி குப்பைல போடுய்யா!.. இயக்குனர் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

cinepettai.com cinepettai.com

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அரசியல் தலைவராக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தப்போதே அவருக்கு பெரும் ரசிக கூட்டம் ஒன்று இருந்தது.

பிறகு அவர் கட்சி துவங்கிய பிறகு அந்த ரசிக கூட்டம் அப்படியே தொண்டர் கூட்டமாக மாறியது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் தமிழகத்தையே ஆட்சி செய்யும் அளவிற்கு பெரும் உயரத்தை தொட்டார். சினிமாவில் இருக்கும்போதே அதில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.

அவர் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்களில் துவங்கி பாடல்கள் வரை அனைத்தும் எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால்தான் ஏ.வி.எம் மாதிரியான பெரும் நிறுவனங்கள் கூட எம்.ஜி.ஆரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கவில்லை.

mgr
mgr

இந்த நிலையில் பாடல் வரிகள் எழுதுவதில் கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து படகோட்டி திரைப்படத்திற்கு பிறகு கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு பாடல் வரிகள் எழுதுவதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து கலங்கரை விளக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்களுக்கு வரி எழுதுவதற்கான வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்திற்கு கொடுத்தார் இயக்குனர் கே.சங்கர்.

பஞ்சு அருணாச்சலம் அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். அவர் எழுத்து நன்றாக இருக்கும் என்பதால் கவிஞர் சொல்லும் கவிதைகளை இவர்தான் எழுதி வந்தார். இந்த நிலையில் கலங்கரை விளக்கம் படத்திற்கு இரண்டு பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அந்த பாடல் வரிகளை கேட்டவுடனேயே எம்.ஜி.ஆருக்கு சந்தேகம் வந்தது. யார் இந்த பாடல் வரிகளை எழுதியது என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார் என கூறியுள்ளார் இயக்குனர் கே.சங்கர்.  இல்லை இந்த மாதிரியான வரிகளை கண்ணதாசனை தவிர யாரும் எழுத முடியாது.

என்னிடம் பொய் சொல்லாதீர்கள். அந்த வரிகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு புது வரிகளை எழுதுங்கள் என கூறிவிட்டார். இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட எம்.எஸ்.வி எம்.ஜிஆரிடம் சென்று என் முன்னிலையில்தான் பஞ்சு அருணாச்சலம் அந்த பாடல் வரிகளை எழுதினார். கண்ணதாசன் அதை எழுதவில்லை என கூறினார்.

அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த பாடல் வரிகளை படத்தில் வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

POPULAR POSTS

ajith
karthik subbaraj cv kumar
ajith
kamalhaasan lingusamy
vengatesh bhat
inga naan thaan kingu
To Top