அந்த சீட்ட போடாத மாப்ள!.. அவ்வளவு சொல்லியும் லிங்குசாமிக்கு விபூதி அடித்த கமல்!..

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு அவர் ரன், சண்டக்கோழி மாதிரியான நிறைய வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் அதற்கு நிகரான தோல்வி படங்களையும் கொடுத்தார்.

இதனால் லிங்குசாமியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் வெகுவாக குறைய துவங்கியது. இந்த நிலையில்தான் படங்களை தயாரிக்கலாம் என முடிவு செய்தார் லிங்குசாமி. அப்படி அவர் தயாரித்த திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படமும் ஒன்று.

உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரிக்க துவங்கும்போது அது ஒரு மாஸ் திரைப்படமாகதான் இருந்தது. ஆனால் கதையில் குறுக்கிட்ட கமல் அந்த படத்தின் மொத்த கதையையும் மாற்றி அமைத்தார். அதுக்குறித்து லிங்குசாமியிடம் பேசிய கமல் கூறும்போது இது என் கனவு படம் சார்.

Uttama-Villain
Uttama-Villain
Social Media Bar

படத்தின் கதையை பாருங்கள். அதில் ஏதாவது கரெக்‌ஷன் இருந்தால் சரி செய்துகொள்ளலாம் என்றார் கமல். ஆனால் லிங்குசாமி கதையை உங்கள் இஷ்டத்திற்கு எடுங்கள். அதற்குள் நான் வர மாட்டேன். ஆனால் படம் முடித்த பிறகு முழு படத்தையும் பார்ப்பேன் அதில் கரெக்‌ஷன் இருந்தால் நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் லிங்குசாமி.

கமலும் அதற்கு ஒப்புக்கொண்டார். முழு படமும் தயாரான பிறகு படத்தை பார்த்த லிங்குசாமி அதில் மாற்ற வேண்டிய விஷயங்களை லிஸ்ட் போட்டு கொடுத்துள்ளார். அதையெல்லாம் மாற்றுவதாக கூறிய கமல் அதை மாற்றமலேயே படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்.

உத்தமவில்லன் பயங்கரமான தோல்வியை கண்டது. இதுக்குறித்து பேட்டியில் கூறும் லிங்குசாமி நான் கூறியது போல அவர் கதையை மாற்றி இருந்தால் அந்த படம் வெற்றியடைந்திருக்கும் என கூறுகிறார் லிங்குசாமி.