விஜய் டிவியில் இருந்து சினிமாவில் பிரபலமான பிரபலங்களில் நடிகை ரவீனாவும் முக்கியமானவர். முதன்முதலில் ஜீ தமிழில் இடம் பெற்ற டான்சிங் ஷோ ஒன்றின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ரவீனா.

அதன்பிறகு டிவி சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் முக்கியமாக கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.
திரைப்பட வாய்ப்பு:

இதனை தொடர்ந்து இளம் வயது முதலே தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார் ரவீனா. புலி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதேபோல ராட்சசன் திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ட்ரெண்டாகும் புகைப்படம்:
ஆனால் இன்னமும் முக்கியமான பெரிய கதாபாத்திரம் என்று எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வரும் ரவீனா தற்சமயம் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையான அளவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி வருகின்றன.