இயக்குனர் ராஜமெளலின் கூட்டணியில் அடுத்த படம் –  தகவல் அளித்த மகேஷ் பாபு

இயக்குனர் ராஜ மெளலி என்றாலே வெற்றிதான். அந்த அளவிற்கு இயக்குனர் ராஜ மெளலி இந்திய சினிமாவின் மிகப்பெரிய சிகரமாகிவிட்டார்.

இதனால் ஹீரோக்கள் பலரும் ராஜமெளலி இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஏற்கனவே பாகுபலி படமே இந்திய அளவில் பயங்கரமான ஹிட் கொடுத்தது. பாலிவுட் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் ரசிகர்களை பிடித்தது பாகுபலி.

அடுத்து தற்சமயம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் கூட 1000 கோடிக்கு அதிகமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இதனால் தற்சமயம் ராஜமெளலி மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இருவரும் முக்கியமான இயக்குனர்களாக உள்ளனர்.

Social Media Bar

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு வெகுநாட்களாக ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க ஆசை இருந்து வந்தது. இவர் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்பொழுது “ராஜமெளலியுடன் பணிப்புரிய வேண்டும் என்கிற என் கனவு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் என நம்புகிறேன்.

அவருடைய படத்தை பொறுத்தவரை அவரது ஒரு படத்தில் நடிப்பது 25 படத்தில் நடித்ததற்கு சமமாகும்”. என கூறியுள்ளார்.

இதன் மூலம் ராஜமெளலி மகேஷ்பாபுவை கொண்டு படம் இயக்க உள்ளார் என்கிற செய்தி உறுதியாகியுள்ளது.