News
காமென்வெல்த் போட்டியில் ஒலித்த யுவன் பாடல்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்த வருடம் காமென் வெல்த் விளையாட்டு போட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தியா இந்த வருடம் அதிகமான அளவில் பதக்கங்களை வென்று வருகிறது.

எப்போதும் காமென் வெல்த் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் இந்திய மக்கள் அதிகமாக கவனத்தை செலுத்தியது. ஆனால் தற்சமயம் இந்தியா அனைத்து விளையாட்டுகளிலும் கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பல கலைஞர்கள் காமென்வெல்த் போட்டியை இன்னும் சுறு சுறுப்பாக்குவதற்காக பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்சமயம் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடலை போட்டு ஒரு மகளிர் குழு காமென்வெல்த் போட்டியில் ஆடியுள்ளது.
அவன் இவன் திரைப்படத்தில் அவர் இசையமைத்த டியா டியா டோலே என்கிற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் அசாத்தியமாக ஆடியிருப்பார் நடிகர் விஷால்.
தற்சமயம் அந்த பாடலை போட்டு அதே போல அந்த பெண்களும் ஆடியுள்ள அந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. உலக மக்கள் கலந்துக்கொள்ளும் போட்டியில் யுவன் பாடலை போட்டது அவருக்கும் ஒரு பெருமையான நிகழ்வாக அமைந்தது.
