News
செஸ் ஒலிம்பியாட்டில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா – குவியும் பாராட்டுக்கள்
சிவகார்த்திகேயன் தற்சமயம் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் இருக்கிறார். தற்சமயம் 30 கோடி சம்பளம் வாங்கி வரும் இவர் கூடிய சீக்கிரத்தில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் தன்னை குழந்தைகளுக்கான நட்சத்திரமாக முன்னிறுத்தி கொள்வதில் கவனமாக இருக்கிறார்.
இதனாலேயே அவரது திரைப்படங்களில் கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளை தவிர்த்து வருகிறார். அடிக்கடி ப்ரோமோஷன் மற்றும் பப்ளிசிட்டிக்காக சில விஷயங்களை இவர் செய்வதுண்டு. அடிக்கடி விஜய் டிவிக்கு விருந்தினராக சென்று எதாவது செய்வார்.
சிவகார்த்திகேயன் போலவே அவரது மகள் ஆராதனாவும் கூட தமிழ் ரசிக பெருமக்களிடம் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்கிறார். இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை பாடியிருந்தார். மேலும் பல நிகழ்ச்சிகளில் இவர் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து பாடியுள்ளார்

தற்சமயம் சென்னையில் நடைபெற்று வெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்ற ஆராதனா நமது தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
உலகமே கலந்துக்கொள்ளும் ஒரு நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய குழந்தை என்கிற பெருமையை ஆராதனா பெற்றார்.
