நீங்க போதை பொருளுக்கு அடிமையா இருந்தீங்களா – லோகேஷிடம் திடுக்கிடும் கேள்வியை கேட்ட ரசிகர்

தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் ஓரளவு அறிமுகமான ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். திரைக்கு வந்து சில காலங்களிலேயே பெரும் நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

மேலும் அவர்களை கொண்டு பயங்கரமான ஒரு பாக்ஸ் ஆஃப் ஹிட்டும் கொடுத்துள்ளார். இதனால் நடிகர்கள் பலரே லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

சொல்ல போனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். அவரது திரைப்படத்தில் டூயட் சாங் போன்ற விஷயங்களை பார்க்க முடியாது. இப்படி அவரது படத்திற்கென தனி அமைப்பை உருவாக்கி வருகிறார்.

அவரது பெரும் ஹிட் படமாக விக்ரம் பார்க்கப்படுகிறது. 600 கோடி வசூலை தாண்டிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிகம் ஓடிய திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனராஜிடம் “பல படங்களில் தொடர்ந்து போதை பொருளை முக்கிய விஷயமாக வைக்கிறீர்கள். எதனால்? ஒருவேளை நீங்கள் போதை மருந்துக்கு அடிமையாகி பிறகு அதிலிருந்து மீண்டு வந்துள்ளீர்களா? என கேட்டார்.

அதற்கு லோகேஷ் கூறும்போது “கைதி திரைப்படம் எடுக்கும்போது அதில் போதை பொருள் காட்சிக்காக போதை பொருள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்க்கொண்டோம். அப்போதுதான் இந்த போதை பொருட்கள் சமூகத்தை எந்த அளவிற்கு சீரழித்து வருகிறது என்பதை அறிய முடிந்தது.”

எனவே பெரிய கதாநாயகர்களை வைத்து எடுக்கும் படங்களில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நன்மை செய்ய முடியும் என நினைக்கிறேன்.” என கூறியுள்ளார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh