News
விருமன் படத்துல வர்ற பாடல் நான் பாடுனது – சர்ச்சையை கிளப்பிய பாடல்
தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி படங்களை கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் ராஜ ராஜ சோழன் கூட பாதிக்கதைக்கு பிறகுதான் வருவார்.
ஆனால் வந்திய தேவன் கதாபாத்திரம்தான் கதை முழுவதிலும் இருக்கும். இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்திக்கு முக்கியமான படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்சமயம் இவர் நடித்த விருமன் திரைப்படம் வெளியாகியுள்ளது. பொதுவாக இயக்குனர் முத்தையா படம் என்றாலே ஒரே கதையாகதான் இருக்கும் என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. அந்த வகையில் கொம்பன் படத்தையே மீண்டும் எடுத்துள்ளனர் என சிலர் படத்தை விமர்சித்து வந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸை படம் திருப்தி படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் மதுர வீரன் என்கிற பாடலை கதாநாயகி அதிதி சங்கர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பாடி இருந்தனர். ஆனால் இந்த பாடலை முதலில் பாடியது பாடகி ராஜலெட்சுமிதான் என்கிற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதுக்குறித்து படக்குழு கூறும்போது “இந்த பாடலை முதலில் அதிதி சங்கரை பாட வைத்துதான் தயார் செய்தோம். ஆனால் ஒருவேளை இதை ராஜலெட்சுமி பாடினால் எப்படி இருக்கும் என பார்ப்பதற்காக அதையும் பாட வைத்தோம். இரண்டில் எது நன்றாக இருந்ததோ அதை படக்குழுவினரே படத்தில் வைத்தனர்” என கூறியுள்ளனர்.
மேலும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மலேசியாவில் நடந்த யுவன் 25 விழாவிலும் கூட இந்த பாடலை அதிதி சங்கர் அவர்கள்தான் பாடினாராம்.
