அடிவாங்கிய பொய்கால் குதிரை – நம்ம டான்ஸ் நடிகருக்கு இப்படி நடந்திருக்க கூடாது.

டான்ஸ் மாஸ்டர் நடிகர் என இரு பணிகளிலும் தமிழ் சினிமாவில் பெஸ்ட்டாக இருப்பவர் நடிகர் பிரபு தேவா. இன்னமும் இளமையில் இருந்தது போலவே இருக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் பிரபு தேவாவும் ஒருவர்.

வெகு நாட்களுக்கு ஒரு முறைதான் அவர் சினிமாவில் படமே நடித்து வருகிறார். அவர் நடித்த லெட்சுமி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.\

தற்சமயம் இவர் நடித்த மை டியர் பூதம் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைந்தது. இந்த படம் சிறுவர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஆனால் அதையடுத்து தற்சமயம் அவர் நடித்து வெளியான பொய்க்கால் குதிரை திரைப்படம் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இதுவரை இந்த படம் மிகவும் குறைவான அளவிலேயே வசூலித்துள்ளது.

மொத்தமே இதுவரை 20 லட்சம் ரூபாய்கள்தான் வசூலித்தது என பேசப்படுகிறது. இந்நிலையில் மை டியர் பூதம் திரைப்படம் தந்த வெற்றி காரணமாக பிரபு தேவா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தின் தோல்வி அவரது சம்பளத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என தெரியவில்லை.

Refresh