ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகராகவும் வெகு காலங்களாகவே சினிமாவில் இருக்கும் நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் சம்திங் சம்திங், தில்லாலங்கடி என்று நிறைய திரைப்படங்களில் வெற்றிகளை கொடுத்திருக்கிறார்.

வெற்றி படங்கள்:

அவரது திரைப்படங்கள் அதிகபட்சம் வெற்றியைதான் கொடுத்து வந்தன ஆனால் சீரியஸான ஒரு கதாபாத்திரமாக அவர் மாறிய பிறகு அவருக்கு வெற்றி என்பது குறைந்துவிட்டது. அப்படி நடித்த அவருக்கு வெற்றியை கொடுத்த படம் என்றால் அது தனி ஒருவன் திரைப்படம் மட்டும் தான்.

Social Media Bar

அதற்கு பிறகு நடித்த சைரன், இறைவன், அகிலன் என்று வெளியான எல்லா திரைப்படங்களுமே படுதோல்வியை கண்டிருக்கின்றன. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்குமா அவர் சினிமாவில் தொடர்ந்து பயணிப்பாரா என்பது கேள்வியாக இருந்து வருகிறது.

இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. தன்னுடைய மனைவியை ஜெயம் ரவி விவாகரத்து செய்யப் போகிறார் என்கிற தகவல் ஒரு வாரமாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பத்திரிக்கையாளர் தகவல்:

இதற்கு நடுவே இது குறித்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப். அவர் பேட்டியில் கூறும் பொழுது முதன் முதலில் ரஜினிகாந்தின் மகளுக்கு திருமணம் செய்ய இருந்த பொழுது ஜெயம் ரவியைதான் மாப்பிள்ளையாக பார்த்து வைத்திருந்தனர்.

jayam-ravi
jayam-ravi

ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகராக ஜெயம் ரவி இருந்து வந்தார். ஆனால் ஜெயம் ரவி பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தனது மகளுக்கு அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்த்தியின் அம்மாதான் ஜெயம் ரவியை வளைத்து போட்டார் என்று சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

ஆனால் அவர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பாக இருக்கிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர் அவர்கள் காதலுக்கு அப்பொழுது  ஆர்த்தியின் வீட்டில் வலுவான எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.