சமீபத்தில் தமிழின் பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான முக்கியமான திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பெரிய பழு வேட்டையர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். பழுவேட்டையர்கள் என்பவர்கள் வம்ச வம்சமாக சோழ பேரரசுக்கு சேவை செய்து வருபவர்கள். ஆனால் இந்த படத்தில் சுந்தர சோழருக்கு எதிரான ஒரு கதாபாத்திரமாக பெரிய பழுவேட்டையர் இருப்பார்.
எனவே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சரத்குமார் நடித்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ராஜ ராஜனை இந்து மதத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்துவது தொடர்பாக சில நாட்களாக விவாதங்கள் சென்றுக்கொண்டுள்ளன. கமல் போன்ற சில நடிகர்கள் கூறும்போது “1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்கிற மதமே கிடையாது. வெள்ளையர்கள் ஆட்சிக்கு பிறகே அப்படியோர் பெயரே வந்தது. 1000 வருடத்திற்கு முன்பு சைவம், வைணவமே இருந்தது. எனவே ராஜ ராஜ சோழனை ஒரு இந்துவாக அடையாளப்படுத்துவது தவறு” என கூறினார்.
இந்நிலையில் இதுக்குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, “மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா வைணவமா? சைவம் இந்து மதமா?
பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்றுகொண்டிருக்கிறது.
சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம். வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது,
1790 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது. யார்? மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா?
அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த விஷயம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.








