ஒரே ஒரு பஸ்ஸை வச்சு செமையான ஒரு படம் –  டைரி திரைப்பட விமர்சனம்

வெகுநாட்களுக்கு பிறகு புது ரகமான ஒரு கதைக்களத்தோடு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு திரைப்படம் டைரி. பொதுவாக ஹாரர், சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள் என்றாலே தமிழில் ஒரு டெம்பிளேட் உண்டு.

ஒரு வீட்டில் ஒரு பேய் இருக்கும். அது ஏதோ ஒரு வகையில் அநீதியாக இறந்த ஒருவரின் ஆத்மாவாக இருக்கும். அது தன் கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்குவதே கதையாக இருக்கும். இந்நிலையில் மிகவும் புதிதான ஒரு படமாக அமைந்த திரைப்படம் டைரி.

பொதுவாக அருள்நிதி எப்போதும் க்ரைம், ஹாரர், த்ரில்லர் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். சீனாவில் பஸ் 375 என்ற ஒரு பேய் கதை உண்டு. அந்த மர்ம கதையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் இன்னாசி பாண்டியன் அவர்களால் எடுக்கப்ப்பட்ட திரைப்படமாக டைரி உள்ளது. 

படம் ஒரு லூப் கான்செப்ட் பேய் கதை எனலாம். 16 வருடங்களுக்கு முன்பு நடந்து இப்போது வரை தீர்க்கப்படாத ஒரு கொலை குற்றத்தை கண்டறிய ஊட்டிக்கு வருகிறார் கதாநாயகன். அப்போது ஒரு இடத்தில் மர்ம பஸ்ஸில் இருந்து தப்பிக்கும் ஒரு நபர், அந்த பேருந்தில் அமானுஷ்யமாக ஏதோ இருப்பதாகவும் அதனால் அதில் பயணிப்பவர்களை காப்பாற்றும் படியும் கேட்கிறார்.

எனவே அருள்நிதியும் கூட அந்த பஸ்ஸை கண்டறிந்து அதில் ஏறுகிறார். இன்னொரு போலீஸ் அதிகாரி அந்த பேருந்தின் விவரங்களை கேட்பதற்காக செல்லும்போது பேருந்து நிலையத்தில் அப்படி ஒரு பேருந்தே கிடையாது என கூறுகின்றனர். இந்நிலையில் அந்த அமானுஷ்ய பேருந்தில் இருந்து கதாநாயகன் பயணிகளை காப்பாற்றி அவரும் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.

படத்தில் இரண்டாம் பாதி பரபரப்பாக சென்றாலும் முதல் பாதி சற்று வேகம் குறைவாக சென்றது என்றே கூறலாம். நடிகர் அருள்நிதியின் கதை தேர்ந்தெடுக்கும் திறன் வியக்க வைப்பதாய் இருக்கிறது. வித்தியாசமான கதைகளத்தை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஹாரர், த்ரில்லர் திரைப்படங்களுக்கென ஒரு தனி கதாநாயகனாக இவர் உருவாகி வருகிறார்

Refresh