சோபிதாவின் தங்கச்சிதான் சமந்தா… ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட புகைப்படங்கள்.. என்னப்பா சொல்றீங்க!..

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி கொண்டிருக்கும் ஜோடி என்றால் அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா. இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களைக் குறித்த விடயங்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தேட தொடங்கியுள்ளார்கள்.

சற்றும் எதிர்பாராத விதமாக வெளிவந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது சோபிதா துலிபாலவின் விவரங்களை இணையதளத்தில் நெட்டிசன்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சோபிதாவின் சொத்து மதிப்பு, அவரின் குடும்பம், அவர் நடித்த படங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் தேடி வரும் நெட்டிசன்கள் தற்பொழுது சோபிதாவின் தங்கை தான் சமந்தா என்ற விடயத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டிங் கப்பல் சோபிதா நாக சைதன்யா

மாடலிங் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கிய சோபிதா துலிபாலா பல விளம்பரங்கள் மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார்.
அதன் பிறகு தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்து பிறகு தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

பாலிவுட்டில் பிரபலமாக அறியப்படும் சோபிதா துலிபாலா, ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் என்ற பட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு வென்றார். இந்நிலையில் தான் அவர் பாலிவுட்டில் பல தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

naga chaithanya
Social Media Bar

ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சோபிதா, தற்பொழுது பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் டேட் செய்து வந்திருக்கிறார்.

இது குறித்த கிசுகிசு வந்த பொழுதிலும் இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

சோபிதாவின் தங்கை சமந்தா

தற்போது சோபிதாவின் தங்கையின் பெயர் சமந்தா என்று தெரியவந்திருக்கிறது. இது நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமான சமந்தாவின் பெயர். சமந்தாவை 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

sobitha sister

தற்போது சோபிதாவின் தங்கை பெயர் சமந்தா என்று தெரியவந்ததும் நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சோபிதாவின் தங்கை சமந்தாவிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது சோபிதாவும் அவரின் தங்கையும் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.