டைவர்ஸ் செய்ய போறோமா இல்லையா? திடீர் திருப்பம் கொடுத்த ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி..!

நடிகர் ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு நடிகராக அதிக வரவேற்பை பெற்றவராவார். ஜிவி பிரகாசும் அவரது மனைவி சைந்தவியும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.

ஜிவி பிரகாஷே இதை உறுதி செய்திருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் சிறுவயது முதலே நட்புடன் பழகி வந்த பிறகுதான் காதலிக்க துவங்கினார்கள்.

gv prakash saindavi1
gv prakash saindavi1
Social Media Bar

அதனை தொடர்ந்துதான் அவர்களது திருமணமும் நடந்தது. எனவே ரொம்ப நாட்களாகவே இவர்கள் சேர்ந்து இருப்பார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை உடைக்கும் வகையில் இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

திடீர் மாற்றம்:

ஆனால் தற்சமயம் பிரிந்து வாழ்வது கடினமாக இருப்பதாக அவர்கள் தரப்பிலிருந்து பேச்சுக்கள் வரத் துவங்கி இருக்கின்றன. ஜிவி பிரகாசுக்கு தனது மனைவியை பிரிவதில் முழுதாக இஷ்டம் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஜிவி பிரகாஷின் அம்மாவிற்கும் சைந்தவியை விடுவதற்கு மனமில்லை என்று கூறப்படுகிறது. எனவே திரும்பவும் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான பேச்சு வழக்குகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் எடுப்பதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.