தொடர்ந்து சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் அதிக வரவேற்பைப் பெற துவங்கிய பிறகு ஒரே மாதிரியான கதைக்களங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.
அதிகபட்சம் ஒரு பெரிய வில்லனை எதிர்க்கும் மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தில்தான் பெரும்பான்மையான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது நடிகர் தனுஷ் மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும்.
அப்படியாக தனுஷ் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் முக்கியமான படமாகும்.
படப்பிடிப்பில் நடந்த சம்பவம்:
இந்த திரைப்படத்தில் நடிகர் கருணாஸின் மகனான கென் நடித்திருந்தார் தனுஷின் மகன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அவர் திரைப்படத்தில் நடந்த ஒரு அனுபவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது எனது அம்மாவிற்கு வெகு நாட்களாகவே படப்பிடிப்புக்கு வந்து நான் நடிப்பதை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் நடித்துக் கொண்டிருந்தோம்.
எனவே அதை அம்மா பார்க்க வேண்டாம் என்று நான் நினைத்தேன் இருந்தாலும் அம்மா கேட்காமல் படபிடிப்பை பார்ப்பதற்கு ஒரு நாள் வந்தார் அன்று வில்லன் கதாபாத்திரம் என்னை அடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
அப்பொழுது அவர் உண்மையிலேயே வேகமாக அடித்து நான் போய் டயரின் மோதி கீழே விழுந்தேன் அதை பார்த்து பட குழுவே அதிர்ச்சி அடைந்து விட்டது. தனுஷ் வேகமாக ஓடி வந்து என்னை பார்த்தார். எனக்கு பின் முதுகு முழுவதும் காயம் ஆகிவிட்டது என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் கென் கருணாஸ்