சினிமாவைப் பொறுத்தவரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மற்ற துறைகளை காட்டிலும் இது சினிமாவில் அதிகமாக நடப்பதற்கு முக்கிய காரணம் நடிகைகளுக்கு வேறு வழியில்லை என்பது தான்.
ஏனெனில் மற்ற துறைகளில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம் என்றால் அங்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் நடக்கும் பொழுது அடுத்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல முடியும்.
ஆனால் சினிமாவில் அப்படியும் முடியாது சினிமா துறையில் ஒரு பெரிய இயக்குனரையோ தயாரிப்பாளரையோ அல்லது நடிகரையோ பகைத்துக் கொள்ளும் நடிகைகளுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற நிலை இருக்கிறது.

சிக்கலில் நடிகை
இந்த நிலையில் ஒரு நடிகை தொடர்ந்து பெண்கள் குறித்த தவறான வீடியோக்களை வெளியிட்டு பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஏக்தா கபூர் இவர் ஆல்ட் பாலாஜி என்கிற ஓ.டி.டி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதில் கந்தி பாத் என்கிற தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இதை அந்த நடிகை ஏக்தாகபூர் தான் வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மீது போக்சா பிரிவில் வழக்கு போடப்பட்டிருக்கிறது தற்சமயம் ஹிந்தி சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இது இருக்கிறது








