தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி,தனுஷ், என பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமா சென்றதும் அதிக கவர்ச்சியுடன் நடிக்க துவங்கிவிட்டார். தற்சமயம் பாலிவுட்டில் தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
இதில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தற்சமயம் பாலிவுட்டில் இன்னமுமே அதிக கவர்ச்சியில் இறங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெகு நாட்களாகவே கீர்த்தி சுரேஷ் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்கிற கேள்வி இருந்தது.
சமீபத்தில் நடிகர் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் இருந்தது. அப்போதே கீர்த்தி சுரேஷ் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கோவாவில் அவர்களது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. வெகு வருடங்களாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்சமயம் அவரை கைப்பிடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.














