கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பரவலாக பிரபலமடைந்தவர் நடிகை அஞ்சலி.
அதற்கு முன்பே அங்காடி தெரு மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் கூட கற்றது தமிழ் திரைப்படம் அவருக்கு தனிப்பட்ட வரவேற்பை பெற்று கொடுத்தது. ஏனெனில் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அந்த ஆனந்தி கதாபாத்திரம் இருந்தது.
அதற்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் புது நடிகைகள் வர துவங்கிய பிறகு நடிகை அஞ்சலிக்கான வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது.
உடனே அதிக கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார் அஞ்சலி. அப்படியும் கூட அஞ்சலியால் வெகு காலங்கள் சினிமாவில் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து அவர் நடித்த மதகஜ ராஜா திரைப்படம் தற்சமயம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் மீண்டும் அஞ்சலிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து புது லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி.