பெண்களுக்கு மாதம் 2500.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. இந்தியாவை திகைக்க வைத்த அதிரடி அறிவிப்புகள்..!

தேர்தல் சமயங்களில் மக்களிடம் எக்கச்சக்கமாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பிறகு அதனை நிறைவேற்றாமல் இருப்பது என்பது அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வரும் விஷயமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் அதனுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் வாக்குறுதிகளை வாரி அளித்து வருகின்றன.

அப்படியான சில வாக்குறுதிகளை இப்போது பார்க்கலாம்.

மின்சாரம்:

ஆம் ஆத்மி: வாடகை வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.

பா.ஜ.க: 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

காங்கிரஸ்: 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மகளிர் உதவி தொகை:

ஆம் ஆத்மி:.மாதம் 2100 ரூபாய் வழங்கப்படும்

பா.ஜ.க: மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும்

காங்கிரஸ்: மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும்

ரேஷன் பொருள்:

பா.ஜ.க: 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும். ஹோலி, தீபாவளி பண்டிகைகளின்போது சிலிண்டர் இலவசம்

காங்கிரஸ்: ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், சிலிடண்ரின் விலையும் 500 ரூபாயாக குறைக்கப்படும்.

இலவச பேருந்து:

ஆம் ஆத்மி:பெண்களை போல மாணவர்களுக்கும் இலவச பேருந்து வசதி செய்து தரப்படும்.

பா.ஜ.க: பெண்கள் இலவச பேருந்து சேவை தொடரும்

மருத்துவ சிகிச்சை / காப்பீடு:

ஆம் ஆத்மி: மருத்துமனைகளில் முற்றிலும் இலவச சிகிச்சை

பா.ஜ.க: குடும்பத்துக்கு 10 லட்சம் மருத்துவ காப்பீடு

காங்கிரஸ்: குடும்பத்துக்கு 25 லட்சம் மருத்து காப்பீடு

இப்படி மூன்று கட்சிகளும் பல திட்டங்களை அறிவித்துள்ளன.