என்னுடைய 10 ஆண்டுக்கால கனவு பழித்தது… தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்பு வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதைகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சீரியஸ் ஆன கதைக்களங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
அதே சமயம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் 10 வருட கனவாகும்.

இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படம் வெளியான பொழுது விஜய் டிவியில் பணிபுரிந்து வந்தார் சிவகார்த்திகேயன்.
அப்பொழுது அங்கு சென்று அந்த படத்திற்கு சென்றதை ஒரு புகைப்படம் ஆக வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் உருவான பொழுது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சிவகார்த்திகேயன்.
அதன்பிறகு ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பிலேயே மான்கராத்தே திரைப்படத்தில் நடித்தார். இப்படி எல்லாம் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் படங்களில் சிவகார்த்திகேயனின் பங்கும் இருந்தது. இறுதியாக இப்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படமும் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது.