திரைக்கதையில் கோட்டை விட்ட மாமன் படம்..! பட விமர்சனம்.!

நடிகர் சூரி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனாலயே குறைந்த திரைப்படங்களில் நடித்தாலுமே கூட அதற்குள் அதிக வரவேற்பை பெற்றுவிட்டார் சூரி.

இதில் சூரி கதை எழுதி தற்சமயம் உருவான திரைப்படம்தான் மாமன். மாமன் திரைப்படத்தை பொருத்தவரை தாய் மாமனுக்கும் சகோதரியின் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பேசும் ஒரு படமாக மாமன் படம் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்த இரு உறவுகளுக்கு இடையே உள்ள அன்பை போற்றும் படங்கள் வந்ததில்லை என்பதால் இது ஒரு பாராட்டுக்குரிய விஷயம்.

Social Media Bar

ஆனால் படம் ஆரம்பிக்கும் பொழுது நன்றாக ஆரம்பித்தாலும் போக போக தொய்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. படத்தின் கதைப்படி தன்னுடைய சகோதரியின் மகன் மீது அதிக பாசம் காட்டும் சூரி தொடர்ந்து எப்பொழுதும் அந்த பையனுடனே இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் இவர்கள் இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. அதனை வைத்து கதை சொல்கிறது ஆரம்பம் முதல் இறுதி வரை உறவுகளுக்கு இடையே உள்ள சென்டிமென்ட் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு செல்வதால் ஒரு கட்டத்திற்கு மேல் பார்ப்பவர்களுக்கு அது போர் அடிக்க துவங்கி விடுகிறது.

எனவே திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் என்பது போல தான் மாமன் திரைப்படம் இருக்கிறது.