Tamil Cinema News
குழந்தைகள் மீது இருவருக்குமே அக்கறையில்லை.. ஜெயம் ரவி ஆர்த்தி குறித்து சாடிய பிரபலம்.!
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டின் திருமண விழாவில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார். இது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுக்களை மீண்டும் துவக்கி வைத்து இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்க தான் செய்யும். எல்லா பிரபலங்களுமே இந்த சிக்கலை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில் விவாகரத்து என்பதும் நடந்து விடுகிறது. விவாகரத்து என்பதே அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ளே மட்டும் நடக்கக் கூடிய ஒரு விஷயம் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அந்த திரையுலகம் என்பதே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.
குடும்பம் தூக்கம் என பலவற்றையும் மறந்து தங்களுக்கான இடத்தை சினிமாவில் பிடிப்பதற்காக அவர்கள் அதிகமாக போராட வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதான் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்திலும் நடந்தது.
அதன் பிறகு சமூக ஊடகங்கள் இதை பெரிதாக பேச துவங்கியது. ஜெயம் ரவி ஆர்த்தி இருவருமே இப்படி சண்டை போட்டுக் கொள்வது அவர்களது குழந்தைகளை தான் மிகவும் பாதிக்கும். இவர்கள் இருவருமே படித்தவர்கள் தான் அவர்களது துறையில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் என்று இது குறித்து பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.
