முழுக்க முழுக்க ஹாலிவுட் பேய்.. டிமாண்டி காலணி 3 கதை இதுதான்..!
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி அதிக பிரபலமடைந்த ஒரு திரைப்படமாக டிமான்டி காலனி இருந்தது. மேலும் இந்த படத்தின் கதாநாயகனான அருள்நிதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாக இந்த படம் அமைந்தது.
அதனை தொடர்ந்து டிமான்டி காலனியின் அனைத்து பாகங்களிலும் நடித்து வருகிறார் அருள்நிதி. டிமாண்டி காலனி 2 திரைப்படமும் கூட நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து அடுத்து டிமான்டி காலனி மூன்றாம் மாதத்திற்கான கதையை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த துவங்க இருக்கிறது.
30 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
ஏற்கனவே இருந்த டிமாண்டி காலணி முதல் பாகத்திலேயே ஒரு ஆங்கிலேயர் தான் பேயாக வருவார் அப்படி இருக்கும் பொழுது இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே அமைவதால் முதல் பாகத்துடன் ஏதாவது ஒரு கனெக்ட் இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.