கமல் ரஜினி படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. வெளிவந்த அப்டேட்.!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மக்கள் எதிர்பார்த்து வரும் திரைப்படமாக ரஜினி கமல் கூட்டணியில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் இருக்கிறது.

இதே மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு கூலி திரைப்படத்திற்கும் இருந்தது ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்னும் பொழுது ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக கண்டிப்பாக இந்த திரைப்படம் இருக்கும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் கூலி திரைப்படத்தை பொருத்தவரை அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. மக்களின் எதிர்பார்ப்பை கூலி திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறலாம். விக்ரம் திரைப்படத்திற்கு கிடைத்த அளவிலான வரவேற்பு என்பது கூலி திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்து ரஜினியும் கமலும் ஒன்றிணைந்து படம் நடிப்பதாக இருக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் கூட்டணி சேர்ந்து நடிக்கின்றனர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளதாக பரவலாக பேச்சுக்கள் இருக்கின்றன.

Social Media Bar

ஆனால் இன்னமும் இயக்குனர் குறித்த எந்த ஒரு தகவலையும் ரஜினியோ அல்லது கமல்ஹாசனோ கூறவில்லை. இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் ரஜினி கமல் என இருவரையும் வைத்து ஒரு பெரிய வெற்றி படத்தை லோகேஷ் கனகராஜ் தான் கொடுக்க முடியும்.

 ஏற்கனவே ரஜினியை வைத்தும் கமலை வைத்தும் தனித்தனியாக அவர் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். எனவே அவரை வைத்து தான் திரைப்படங்களை இயக்குவார்கள். ஆனால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

இந்த வருடம் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசனும் அன்பறிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனால் அடுத்த வருடம் தான் இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

அந்த நேரத்தில் இயக்குனர் யார் என்பதை வெளியிட்டுக் கொள்ளலாம் எனலாம் என்று நினைத்துக் கொண்டுதான் இப்பொழுது அவர்கள் எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை என கூறுகிறார் வலைப்பேச்சு பிஸ்மி.