மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா.. சிம்புவுடன் கூட்டணி..!
மையோசிட்டிஸ் நோய்க்குப் பிறகு மீண்டு வந்த சமந்தாவிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய் இருந்தது. ஏனெனில் நோய் தாக்கம் வந்த சமயத்தில் வந்த பட வாய்ப்புகள் எதிலுமே பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார் சமந்தா.
ஏனெனில் அந்த படங்களில் நடிக்க கூடிய அளவிற்கு உடல்நிலை அப்பொழுது சமந்தாவிற்கு இருக்கவில்லை. இந்த நிலையில் இப்பொழுது உடல்நிலை சரியாகி வந்த சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

வாய்ப்பை பெற்ற சமந்தா:
அதே சமயம் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் வெகு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தில் தான் கதாநாயகியாக சமந்தாவிற்கு வாய்ப்பு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பேமிலி மேன் 2 என்கிற சீரியஸில் சமந்தா நடித்த பொழுது எந்தவித முக அலங்காரமும் இல்லாமல் சிறப்பாக அவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
எனவே அந்த மாதிரியான ஒரு முக அமைப்பில் தான் இந்த படத்திற்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்படுகிறது என்பதால் வெற்றிமாறன் சமந்தாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.