மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சீரியஸ் ஆன கதைகளை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார்.

அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான மதராசி திரைப்படமும் சரி, அதற்கு பிறகு வர இருக்கும் பராசக்தி திரைப்படமும் சரி தொடர்ந்து சீரியசான கதைகளத்தை கொண்ட திரைப்படங்கள் ஆகும்.

ஆனால் சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து காமெடி கதாபாத்திரமாக பார்த்து ரசித்த மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது.

sivakarthikeyan
sivakarthikeyan
Social Media Bar

சிவகார்த்திகேயன் அடுத்த படம்:

அதை நிறைவு செய்யும் வகையிலும் குழந்தைகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க வேண்டும் என்னும் வகையிலும் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்தியன்.

சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற திரைப்படத்தை எடுத்து 100 கோடி வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. எனவே அவரது இயக்கத்திலேயே அடுத்து இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தின் பட வேலைகள் சீக்கிரத்தில் துவங்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.