தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். பெரும்பாலும் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது விஷாலுக்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகவே வந்து கொண்டு இருக்கிறது.
விஷாலுக்கு அதிக வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படங்களில் இரும்புத்திரை மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருப்பார்.
விஷாலை விடவும் அர்ஜுனின் கதாபாத்திரம்தான் பாடத்தில் பெரிய கதாபாத்திரமாக இருக்கும். இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் விஷாலிடம் இந்த கதையை கூறும் பொழுது இதில் அர்ஜுன் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த விஷால் இந்த விஷயத்தை நீங்கள் என்னிடம் சொன்னதாகவே இருக்க வேண்டாம். முதலில் அர்ஜுன் சாரிடம் சென்று இந்த கதையை கூறுங்கள் அவர் வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்கிறாரா பார்ப்போம் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு பிறகு கதையை கேட்டுவிட்டு அர்ஜுன் விஷாலுக்கு போன் செய்து நான் இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தவன். என்னையே நீ வில்லனாக நடிக்க சொல்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த விஷால் இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரமாக தான் உங்களது கதாபாத்திரம் இருக்கும்.
கிளைமாக்ஸில் கூட உங்களது கதாபாத்திரம் தான் மக்களுக்கு முக்கிய மெசேஜ் சொல்வதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் இந்த விஷயத்தை விஷால் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.