தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் யாவும் காமெடி கதைக்களங்களை கொண்டதாக இருக்க கூடியதாகும்.
இந்த நிலையில் சினிமாவுக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ஆர்.ஜே பாலாஜிக்கு திரைப்படங்களில் நடிப்பதை விடவும் அவற்றை இயக்குவதன் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அதற்கு பிறகு வீட்ல விசேஷம் என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படமுமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து இப்போது திரைப்படங்களை இயக்குவது மீது ஆர்வம் காட்டி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் தற்சமயம் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நிறைய திரைப்படங்களை இவர் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி தனது பெயரை தற்சமயம் மாற்ற இருக்கிறாராம்.
ஆர்.ஜே.பி என தனது பெயரை மாற்ற இருக்கிறாராம் ஆர்.ஜே பாலாஜி. ஏனெனில் நடிகை ஊர்வசி ஒரு சமயம் இவரை சந்தித்தப்போது மூன்று எழுத்தில் பெயர் வைத்தால் நல்ல எதிர்காலம் உண்டு. எம்.ஜி.ஆர் கூட மூன்று எழுத்துதான் என கூறினாராம்.
அதனை தொடர்ந்துதான் ஆர்.ஜே பாலாஜி தனது பெயரை மாற்றுவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.








