கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு கவிஞராக இருந்தவர் கவிஞர் வாலி.
கண்ணதாசன் கூட எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் மட்டும்தான் பாடல் வரிகளை எழுதினார். ஆனால் கவிஞர் வாலியை பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் துவக்கி நடிகர் அஜித் விஜய் காலகட்டம் வரை பாடல் வரிகள் எழுதி வந்தவராக வாலி இருந்தார்.
சினிமா எவ்வளவு மாற்றங்களை கண்டபோதும் அதற்கு ஏற்ற மாதிரியான பாடல் வரிகளை எழுதும் வல்லமை பெற்றவராக வாலி இருந்தார். இந்த நிலையில் ஒருமுறை வாலியிடம் பேட்டியில் கேள்வி கேட்கும் பொழுது ஒரு நிருபர் நிறைய ஆபாசமான வரிகளை நீங்கள் பாடல்களில் பயன்படுத்துகிறீர்களே என்று கேட்டிருந்தார்.

உண்மையை கூறிய வாலி:
அதற்கு பதில் அளித்த வாலி ரொம்ப வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் சினிமாவில் நான் காசுக்கு வாள் ஆட்டுகிற நாய் ஆனால் கவியரங்கத்தை பொறுத்தவரை அங்கு வண்ண மொழி பிள்ளைக்கு நான் தாய் என்று கூறியிருக்கிறார்.
அதனால் தான் கவியரங்குகளில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி அவர் கவிதைகளை பாடுவது கிடையாது இந்த விஷயத்தை வாலியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
			 
			








