தற்போது மொத்த உலகமுமே ஏஐ யுகமாக மாறிக்கொண்டு இருக்கிறது மனிதர்கள் செய்யும் பல வேலைகளை மிக எளிமையாக செய்து கொடுப்பதால் மக்களும் தொடர்ந்து ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
பல்வேறு தளங்களில் இப்பொழுது முக்கியமான ஒரு விஷயமாக ஏ.ஐ மாறி இருக்கிறது. இந்த நிலையில் நிறைய ஏ.ஐ நிறுவனங்கள் பிரீமியம் கட்டினால் மட்டும்தான் அதிக ஆப்ஷன்களை வழங்குகின்றன.
இந்த நிலையில் ஏர்டெல் தன்னுடைய பயனர்களுக்கு பெர்ப்ளக்சிட்டி இலவசமாக வழங்கியது. இதனை தொடர்ந்து இப்பொழுது ஜியோ ஜெமினி ப்ரோ என்கிற கூகுளின் ஏஐ அம்சத்தை இலவசமாக 18 மாதங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த 18 மாத ஜெமினி ப்ரோவின் மதிப்பு 35 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இமேஜ் ஜெனரேஷன், வீடியோ ஜெனரேஷன் போன்றவற்றை பலரும் ஜெமினி ஏஐ தளத்தில் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் ப்ரோ வர்ஷன் இலவசமாக கிடைக்கும் நிலையில் இன்னும் பல விஷயங்களை அவர்களால் செய்ய முடியும் இது 5g பிளான் போடும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டு இருக்கிறது.









