
பிரபல பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்து, இயக்குனர் மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ராஜா சாப்’. பேன் இந்தியா பேய் படமாக வெளியான இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு, ஓடிடியிலும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் பலர் இந்த படத்தில் க்ளாமரிலும், ஆக்ஷனிலும் இறங்கி கலக்கிய மாளவிகா மோகனனை புகழ்ந்து தள்ளினர். அதிலும் இடியை இறக்குவது போல படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகளில் சண்டை போட்டது மாளவிகா மோகனன் அல்ல, ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மாளவிகா மோகனன் என்று நினைத்து இந்த ஆண் ஸ்டண்ட் நடிகரையா ரசித்தோம் என மாளவிகா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில்தான் அந்த புகைப்படமே ஒரு போலி என்றும், சண்டை காட்சிகளை தானே ரிஸ்க் எடுத்து நடித்ததாகவும் பதிவிட்டு ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் மாளவிகா மோகனன். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆபத்தான காட்சிகளை முக்கிய நடிகர்கள் செய்ய முடியாத நிலையில் ஸ்டண்ட் டபுள் செய்வார்கள், ஆனால் என்னுடைய ஆக்ஷன் காட்சிகளை நானேதான் செய்தேன். நான் ஒரு ஸ்போட்டிவான பெண் என கூறியுள்ளார். மேலும் தான் கயிறு கட்டி சண்டை காட்சிகளுக்கு ட்ரெயினிங் எடுத்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.





