நேற்று முதலே ராஜா என்பவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக ட்ரெண்டிங் ஆகி வந்த வண்ணம் இருந்தது. ராஜா என்பவர் தன்னுடைய மனைவி ஜோஸ் என்பவருடன் கள்ளதொடர்பில் இருப்பதாக கூறியிருந்தார்.
தன் மனைவி அந்த நபரோடு ஒரே வீட்டில் இருப்பதை இவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தனது மகனுடன் ராஜா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தனது மனைவி கள்ள தொடர்பில் இருந்ததை தாங்க முடியாமல் அவரை கொலை செய்துவிட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
நேற்று முழுவதும் அந்த வீடியோ வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் , அவரது நண்பர் என்று ஒருவர் தற்சமயம் அந்த ஜோடிகளுக்குள் என்ன நடந்தது என விவரித்துள்ளார்.

அவர் கூறும்போது ராஜா மீது எந்த தவறுமே இல்லை. அவர் அந்த பெண்ணை காதலித்துதான் திருமணம் செய்துக்கொண்டார். 2 வருடங்களுக்கு முன்பிருந்தே அந்த பெண் ஜோஸ் என்கிற இன்னொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த பிறகும் கூட ராஜா தன் மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்றுதான் நினைத்துள்ளார்.
ஆனால் மகன், கணவர் இருவரையும் விட்டு விட்டு ஜோஷ் என்கிற நபருடனே இருந்துள்ளார் மனைவி. பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இருந்தும் மனைவி நீண்டநாள் சேர்ந்து இருக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் கள்ள காதலுடன் பழகியதால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இப்போது என்னால் அவரை தொடர்பு கொள்ளவே இயலவில்லை என கூறியுள்ளார் அவரது நண்பர்.






