தளபதி 67 இல் பிக் பாஸ் ஜனனி! – புது அப்டேட்!

தற்சமயம் திரையில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது விஜய் நடித்த வாரிசு. ஆனால் விஜய் ரசிகர்கள் வாரிசை விட அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 67.

Social Media Bar

ஏனெனில் தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கக்கூடியவை என்பது பலரும் அறிந்த விஷயமே.

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் கெளதம் மேனன், மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் படத்தை பற்றிய அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனியும் கூட தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. எடுத்த உடனேயே விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஜனனிக்கு பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் எடுத்தவுடன் பெரிய கதாபாத்திரம் கொடுக்க கூடிய இயக்குனர் கிடையாது என்பதால் ஜனனிக்கு இந்த படத்தில் சின்ன கதாபாத்திரமே இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஜனனியின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.