Connect with us

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபரீதம்! –  விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி

News

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபரீதம்! –  விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி

Social Media Bar

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன்.

தனது தாய்க்கு உடல் நிலை சரியாக வேண்டும் என்பதற்காக பணக்காரனாக இருக்கும் நமது கதாநாயகன் குறிப்பிட்ட சில நாட்கள் பிச்சைக்காரனாக இருப்பதை வைத்து சுவாரஸ்யமான செல்லும் படம் பிச்சைக்காரன்.

அதன் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. பிச்சைக்காரன் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் எடுக்கப்பட்டு வந்தது.

அதில் ஒரு அதிரடி சண்டைக்காட்சியானது படகில் எடுக்கப்பட்டது. தண்ணீரில் படகில் சவாரி செய்துக்கொண்டே சண்டை போடுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த விஜய் ஆண்டனியின் படகு வெறொரு படகில் மோதி விபத்து உண்டானது. உடனடியாக விஜய் ஆண்டனியை மீட்ட படக்குழுவினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவமனையில் பயப்படும் அளவிற்கு பெரிய ஆபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது.

எனவே விஜய் ஆண்டனி உடல்நிலை சரியான பிறகு மற்ற காட்சிகளை படம் பிடித்து கொள்ளலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top