Connect with us

பேசாம படத்தை விட்டு தூக்கிறலாமா? – தளபதி 67 படத்தில் பிரச்சனை செய்யும் மிஸ்கின்!

Latest News

பேசாம படத்தை விட்டு தூக்கிறலாமா? – தளபதி 67 படத்தில் பிரச்சனை செய்யும் மிஸ்கின்!

cinepettai.com cinepettai.com

தமிழின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். இவரின் திரைப்படங்கள் என்பதற்காகவே திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ஒரு ரசிக கூட்டம் இவருக்கு உண்டு.

இதற்கிடையே அடிக்கடி திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் மிஸ்கின். அந்த வகையில் தற்சமயம் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்ற மாதம் துவங்கிய படப்பிடிப்பு வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது. தற்சமயம் விஜய்க்கான காட்சிகளும் கூட படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே இயக்குனர் மிஸ்கின் படத்தின் காட்சிகளை லீக் செய்வதாக கூறப்படுகிறது.

பட ஷூட்டிங் சமயத்தில் பேட்டிகளில் பேசும் மிஸ்கின் படப்பிடிப்பு காட்சிகள் குறித்து பேசுகிறார். இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது இப்படியே நீடிக்கும் பட்சத்தில் மிஸ்கினை படத்தில் இருந்து நீக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top