Actress
தாவணியே என்ன மயக்குறியே! – அனுபாமாவின் அசத்தும் புகைப்படங்கள்
மலையாள சினிமாவில் நடித்த முதல் படத்தின் மூலமே தென்னிந்தியா முழுக்க பிரபலமானவர் நடிகை அனுபாமா. ஆம் மலையாளத்தில் இவர் முதன் முதலாக நடித்த படம் ப்ரேமம்.

இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து நடிகை அனுபாமாவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கு படமான கார்த்திகேயா 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனுபாமா.

