அந்த குடும்பத்தை வாழ வைங்க!.. விஜய்யை வேண்டி கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது விஜய் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்.

அதன் பிறகு அவரது திரை வாழ்க்கையை திருப்பி போடும் படமாக பூவே உனக்காக திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக காதல் படமாக நடிக்க துவங்கிய விஜய் தொடர்ந்து காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாள் போன்ற படங்களில் நடித்தார்.

Social Media Bar

திருமலை திரைப்படத்திற்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் நாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமானார் விஜய். தற்சமயம் விஜய் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட அவர் நடித்த சில படங்கள் பெரும் தோல்வியை கண்டுள்ளது.

அந்த வரிசையில் மெர்சல் படமும் ஒன்று. மெர்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் முரளி நாராயணன் முக்கியமானவர். இந்த படம் கிட்டத்தட்ட பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் பெரும் கடன் நெருக்கடிக்கு உள்ளானார் முரளி நாராயணன். இவர் இயக்குனர் ராம நாராயணின் மகன் ஆவார்.

இதுக்குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் கூறும்போது விஜய் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் படம் நடித்து தருகிறார். நம்ம தமிழ்நாட்டு சினிமாவை சேர்ந்த முரளி நாராயணனுக்கு அவர் ஒரு பட வாய்ப்பு கொடுத்து அவரை வாழ வைக்கலாம் என கூறியுள்ளார் விஜய்.